Seven Purposes & Eight Principles of ISKCON

7 Purposes of ISKCON

  1. To systematically propagate spiritual knowledge to society at large and to educate all people in the techniques of spritual life in order to check the imbalance of values in life, and to achieve real unity and peace in the world.
  2. சமூகத்தில் ஆன்மீக அறிவை முறையாகப் பரப்புதல் மற்றும் வாழ்க்கையில் உள்ள ஏற்றத்தாழ்வைச் சரிசெய்து, உலகில் உண்மையான ஒற்றுமை மற்றும் அமைதியை அடைவதற்கு ஆன்மீக வாழ்க்கையின் நுட்பங்களை அனைவருக்கும் கற்பித்தல்.
  3. To propagate a consciousness of Kṛṣṇa as He is revealed in Bhagavad-gita and Srimad Bhagavatam.
  4. பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கிருஷ்ண உணர்வைப் பரப்புதல்.
  5. To bring the members of the society together with each other and nearer to Krsna, and thus to develop the idea within the members and humanity at large that each soul is part and parcel of the Supreme Personality of Godhead.
  6. சமுதாயத்தின் உறுப்பினர்களை அனைவரையும் ஒன்றிணைத்து, கிருஷ்ணருக்கு நெருக்கமாகக் கொண்டுவருதல். இதன் மூலம் ஒவ்வொரு ஆத்மாவும் பரம புருஷ பகவானின் அங்கம் மற்றும் பகுதி என்ற எண்ணத்தை அங்கத்தினர்கள் மற்றும் மனித குலத்தினருக்குள்ளே உருவாக்குதல்.
  7. To teach and encourage the sankirtan movement, congregational chanting of the holy name of God, and to reveal the teachings of Lord Caitanya Mahaprabhu.
  8. சங்கீர்த்தன இயக்கத்தை கற்பிக்கவும் ஊக்குவிக்கவும், கடவுளின் புனித நாமத்தை உச்சரிக்கவும், சைதன்ய மஹாபிரபுவின் போதனைகளை பரப்பவும் செய்தல்.
  9. To erect for the members, and the society at large, a holy place of transcendental pastimes, dedicated to the Personality of Godhead.
  10. உறுப்பினர்களுக்காகவும், சமுதாயத்திற்காகவும், கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆன்மீக  புனித ஸ்தலங்களை எழுப்புதல்.
  11. To bring the members closer together for the purpose of teaching a simple and more natural way of life.
  12. எளிமையான மற்றும் இயற்கையான வாழ்க்கை முறையை நோக்கி உறுப்பினர்களை கொண்டு செல்லுதல்.
  13. With a view towards achieving the aforementioned purposes, to publish and distribute periodicals, magazines, books and other writings. 
  14. மேற்கூறிய நோக்கங்களை அடையும் நோக்கில், புத்தகங்கள், இதழ்கள் மற்றும் பிற குறிப்புகளை வெளியிட்டு விநியோகித்தல்.

8 Principles of ISKCON

1. By sincerely cultivating a bona fide spiritual science, we can be free from anxiety and come to a state of pure, unending, blissful consciousness in this lifetime.
உண்மையான ஆன்மீக அறிவியலை வளர்த்துக் கொள்வதன் மூலம், நாம் கவலையிலிருந்து விடுபட்டு, இந்த வாழ்நாளில் தூய்மையான, முடிவில்லாத பேரின்ப உணர்வு நிலைக்கு வரலாம்.

2. We are not our bodies but eternal spirit souls, parts and parcels of God (Krsna). As such, we are all brothers, and Krsna is ultimately our common father.
நாம் நமது உடல்கள் அல்ல, நித்திய ஆன்மாக்கள், கடவுளின் பாகம் மற்றும் அங்கங்கள்  (கிருஷ்ணர்). எனவே, நாம் அனைவரும் சகோதரர்கள், கிருஷ்ணர் நமது பொதுவான தந்தை.

3. Krsna is the eternal, all-knowing, omnipresent, all-powerful, and all-attractive Personality of Godhead. He is the seed-giving father of all living beings, and He is the sustaining energy of the entire cosmic creation.
கிருஷ்ணர் நித்தியமானவர், அனைத்தையும் அறிந்தவர், எங்கும் நிறைந்தவர், எல்லாம் வல்லவர், மற்றும் அனைத்தையும் கவர்ந்தவர். அவர் அனைத்து உயிரினங்களுக்கும் விதை கொடுக்கும் தந்தை, மேலும் அவர் முழு பிரபஞ்ச படைப்புக்கும் தாங்கும் ஆற்றல்.

4. The Absolute Truth is contained in all the great scriptures of the world. However, the oldest know revealed scriptures in existence are the Vedic literatures, most notably the Bhagavad-gita, which is the literal record of God’s actual words.
பூரண உண்மை உலகின் அனைத்து புனித நூல்களிலும் உள்ளது. இருப்பினும், இருப்பதிலேயே மிகவும் பழமையான வெளிப்படுத்தப்பட்ட புனித நூல் வேத இலக்கியங்கள். குறிப்பாக பகவத் கீதை கடவுளின் வார்த்தைகளின் நேரடிப் பதிவாகும்.

5. We should learn the Vedic knowledge from a genuine spiritual master one who has no selfish motives and whose mind is firmly fixed on Krsna.
சுயநல நோக்கங்கள் இல்லாத, கிருஷ்ணரின் மீது உறுதியாக நிலைத்திருக்கும் உண்மையான ஆன்மீக குருவிடம் இருந்து நாம் வேத அறிவைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

6. Before we eat, we should offer to the Lord the food that sustains us. Then Krsna becomes the offering and purifies us.
நாம் உண்ணும் முன்,  உணவை இறைவனுக்குப் படைக்க வேண்டும். பின்னர் கிருஷ்ணர் பிரசாதமாக மாறி நம்மை தூய்மைப்படுத்துகிறார்.

7. We should perform all our actions as offerings to Krsna and do nothing for our own sense gratification.
நாம் நமது செயல்கள் அனைத்தையும் கிருஷ்ணருக்கு காணிக்கையாகச் செய்ய வேண்டும், நமது புலன் திருப்திக்காக எதையும் செய்யக்கூடாது.

8. The recommended means for achieving the mature stage of love of God in this age of Kali, or quarrel, is to chant the holy names of the Lord. The easiest method for most people is to chant the Hare Krsna mantra:
Hare Krsna, Hare Krsna, Krsna Krsna, Hare Hare
Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare
இந்த கலி யுகத்தில் கடவுளின் அன்பின் முதிர்ந்த நிலையை அடைவதற்கு பரிந்துரைக்கப்பட்ட வழிமுறை  இறைவனின் புனித நாமங்களை உச்சரிப்பதாகும். ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபிப்பதே பெரும்பாலான மக்களுக்கு எளிதான வழி:
ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ண கிருஷ்ணா, ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே